< Back
சினிமா செய்திகள்
சூர்யா 44 படப்பிடிப்பு எப்போது துவங்கும்? - வெளியான தகவல்
சினிமா செய்திகள்

''சூர்யா 44'' படப்பிடிப்பு எப்போது துவங்கும்? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
15 May 2024 4:20 PM IST

நடிகர் சூர்யா ,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்