< Back
சினிமா செய்திகள்
அரண்மனை- 4 திரைப்படம் எப்போது வெளியாகும்?... படக்குழு அறிவிப்பு
சினிமா செய்திகள்

அரண்மனை- 4 திரைப்படம் எப்போது வெளியாகும்?... படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Sept 2023 6:03 PM IST

அரண்மனை- 4 திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவான அரண்மனை திரைப்படம் தற்போது வரை 3 பாகங்களாக வெளியாகியுள்ளது. இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் படமானது 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்