அஜித் படத்தில் சிவகார்த்திகேயன் - எந்த படம் தெரியுமா?
|சிவகார்த்திகேயன், அஜித் படம் ஒன்றில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் 'அமரன்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'மெரினா' படம் மூலம் அறிமுகமானார்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஓவியா நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன், அஜித் படம் ஒன்றில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இது பலருக்கு தெரிந்திருக்காது. அஜித் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'ஏகன்' படம்தான் அது.
அஜித் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ஜெயராம், சுமன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தை பிரபுதேவாவின் சகோதரரும் பிரபல நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் இயக்கியிருந்தார்.