'சினிமாவில் சேர இதுதான் காரணம்' - நடிகை சமந்தா
|நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தது எப்படி என்று கூறியுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா புதிய படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில், 'காபி வித் கரண் சீசன் 7' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சமந்தா. அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர் நீங்கள் சினிமாவை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று சமந்தாவிடம் கேட்டார். அதற்கு சமந்தா கூறியதாவது, "ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்ததால், என்னுடைய தந்தை என் மேல் படிப்பிற்காக பணம் செலுத்த முடியாது என்று கூறிவிட்டார், அதனால் வேறு வழி இல்லாமல் சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று கூறினார். பின்னர் சினிமா எனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து விட்டது என்று கூறியுள்ளார்.
தற்போது, சமந்தா மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஒரு படத்திலும், ஷாருக்கானுடன் இந்தியில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், நடிகர் வருண் தவானுடன் இணைந்து 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற தொடரிலும் நடித்துள்ளார்.