ஊ சொல்றியா..பாடலுக்கும் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம்? - மனம் திறந்த சமந்தா
|ஊ சொல்றியா.. பாடலில் நடிகை சமந்தா நடித்திருந்தார்.
சென்னை,
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அந்த சமயத்தில் வெளியான படம்தான் 'புஷ்பா தி ரைஸ்'.
இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.
குறிப்பாக இப்படத்தில் வந்த ஊ சொல்றியா.. பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலில் நடிகை சமந்தா நடனமாடினார். இந்நிலையில், இந்நிலையில், நடிகை சமந்தா பேசியதாவது,
ஊ சொல்ரியா பாடல் என்னிடம் வந்தபோது என் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரும் இதில் நடிக்க வேண்டாம் என்று கூறினர். ஏனென்றால், அது நான் விவாகரத்தை அறிவித்த சமயம். நான் ஏன் அதை மறுக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் என் 100 சதவிகிதத்தை கொடுத்தேன் ஆனால், அது பயனளிக்கவில்லை. விவாகரத்தையும் ஊ சொல்ரியா பாடலில் நடிப்பதையும் நான் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.