20-25 ஆடிஷன்களில் நிராகரிப்பு...தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகை
|பல்வேறு நிராகரிப்புகளை எதிர்கொண்டு தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார் இவர்.
சென்னை,
ஷாருக்கான், ரஜினிகாந்த் போன்றவர்கள் நட்சத்திர அந்தஸ்த்தை பெற பல்வேறு கஷ்டங்களை கடந்து வந்துள்ளனர். அவ்வாறு பல்வேறு கஷ்டங்களையும் நிராகரிப்புகளையும் எதிர்கொண்டு தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார் இவர். நாம் பேசுவது வேறுயாரும் இல்லை ராஷ்மிகா மந்தனா.
ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக இருக்கிறார். இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா முன்னதாக பல படங்களில் இருந்து நிராகரிக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா.
சமீபத்தில், தன்னை நடிகைபோல் தெரியவில்லை என கூறி 20-25 ஆடிஷன்களில் நிராகரித்ததாக கூறினார். இவ்வாறு பல நிராகரிப்புகளை கடந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார்.
ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், 2 பாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.