< Back
சினிமா செய்திகள்
லியோ பெயரை கூறியதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அலறியது..ஜவான் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் ருசிகரம்...!
சினிமா செய்திகள்

லியோ பெயரை கூறியதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அலறியது..ஜவான் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் ருசிகரம்...!

தினத்தந்தி
|
31 Aug 2023 9:59 AM IST

ஜவான்' திரைப்படத்தை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகிறது என்று சொன்னதும், ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அலறியது.

சென்னை,

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "ஜவான்" திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஜவான் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி என அனைவரும் கலந்துகொண்டார்கள்.

அப்போது, ஜவானில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ப்ரியாமணி மேடையில் பேசுகையில், இசையமைப்பாளர் அனிருத் பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார். இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் மூவி, மேலும் இவருடைய இசையில் 'ஜவான்' திரைப்படத்தை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகிறது என்று சொன்னதும், ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அலறியது.

உடனே, நடிகை ப்ரியாமணி சரி… என்ன கொஞ்சம் பேச விடுங்க என்று கூறினாலும் கூட, ரசிகர்களின் கூப்பாடு நின்றபாடில்லை. கூச்சல் நிற்காமல் அரங்கமே அதிர்ந்தது.

ஜவான் படத்தின் பாடல்கள் வெளியாகி இந்தியிலும், தமிழிலும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு ஹிட் ஆகக்கூடிய வகையில், படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

மேலும் செய்திகள்