சிறந்த நடிகர் என்று தமிழ் நடிகரை பாராட்டிய கத்ரினா கைப் - யார் தெரியுமா?
|கத்ரினா கைப் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரினா கைப். இவர் இந்தி திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் தயாரான இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று பேசப்பட்டநிலையில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில், விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைப்பின் நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இப்படம் வெளியான பின்பு நடந்த பேட்டியொன்றில் அவருக்கு ஜோடியாக நடித்த தமிழ் நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "விஜய்சேதுபதி சாரை சினிமா துறையில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன், அவரைப் போன்ற ஒரு நடிகருடன் பணிபுரிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்," என்றார்.