திருமணம் எப்போது? அனுஷ்கா விளக்கம்
|பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது. 'பாகுபலி' பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார். அனுஷ்காவுக்கு 41 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் பிரபாசை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவருமே மறுத்தனர். 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக உடல் எடையை கூட்டி பிறகு குறைக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன.
இந்த நிலையில் ஐதராபாத்தில் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறும்போது, ''நிஜமாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. திருமணம் என்பது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கான நேரம் வரும்போது இயல்பாகவே நடக்கும். திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இப்போது இல்லை. திருமணம் மகிழ்ச்சியான விஷயம். அது அமையும்போது எல்லோருடனும் பகிர்ந்து கொள்வேன்'' என்றார்.