விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது..? - வெங்கட்பிரபு அளித்த பதில்
|இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைவடையும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும் உள்ளது.
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவினர்களை தொந்தரவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜே பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' பட ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைவடையும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும் உள்ளது. அதோடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். படத்தில் நிறைய சிஜி பணிகள் உள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸில் அதன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவை எல்லாம் நிறைவடைந்தால்தான், படத்தின் அடுத்த அப்டேட்டையோ, பட வெளியீட்டையோ திட்டமிட முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், சரியான நேரத்தில் அப்டேட் வரும். இவ்வாறு அவர் கூறினார்.