< Back
சினிமா செய்திகள்
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ? படக்குழு அறிவிப்பு
சினிமா செய்திகள்

'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ? படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Dec 2022 6:12 PM IST

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக இசைக வெளியீட்டு விழா நடைபெறும் .

சென்னை,

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாடினார். இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வெளியானது. . இந்நிலையில், வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நேற்று வெளியானது .

இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறுகிறது என படக்குழு அறிவித்துள்ளது.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக இசைக வெளியீட்டு விழா நடைபெறும் .

Related Tags :
மேலும் செய்திகள்