< Back
சினிமா செய்திகள்
இந்தியன் 2  திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா எப்போது ? - வெளியான அறிவிப்பு
சினிமா செய்திகள்

'இந்தியன் 2 ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ? - வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
30 May 2024 2:23 PM GMT

'இந்தியன் 2 ' படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'நீலோற்பம்' நேற்று வெளியாகியுள்ளது. தற்பொழுது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்