கார்த்தியின் 'கைதி 2' படப்பிடிப்பு எப்போது?
|லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் 2019-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
கைதி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ரசிகர்களும் கைதி 2 விரைவில் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இதுவரை பட வேலைகள் தொடங்கப்படாமல் தாமதமாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார். கார்த்தியும் பொன்னியின் செல்வனுக்கு பிறகு ராஜு முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்கள் கைவசம் உள்ளன.
இந்த 3 படங்களையும் முடித்த பிறகு கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் லியோ படம் முடிந்ததும் கைதி 2 பட வேலைகளில் லோகேஷ் கனகராஜ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.