< Back
சினிமா செய்திகள்
When Dhanush opened up about being ridiculed for his looks; was called auto-driver
சினிமா செய்திகள்

'என்னை கேலி செய்யாத, அவமானப்படுத்தாத ஆளே இல்லை' - தனுஷ்

தினத்தந்தி
|
28 July 2024 8:25 AM IST

தனுஷ் தனது தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டதாக கூறினார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். இவர் பவர் பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய ராயன் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு தனது அற்புதமான நடிப்பின் மூலம் இதயங்களை வென்ற தனுஷ் சினிமாவுக்கு வந்த முற்பகுதியில் உருவ கேலி செய்யப்பட்டார் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம் அது உண்மைதான்.

2015 ல் விஜய் சேதுபதி, அனிருத் மற்றும் சதீஷ் ஆகியோருடன் ஒரு உரையாடலின் போது, தனுஷ் தனது தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டது குறித்து தெரிவித்தார். தனுஷ் கூறுகையில்,

''காதல் கொண்டேன்' படப்பிடிப்பின்போது ஹீரோ யார் என்று என்னிடம் கேட்டனர். எந்த அவமானத்தையும் சந்திக்கத் தயாராக இல்லை என்பதால் வேறு ஒருவரைச் சுட்டிக்காட்டினேன். ஆனால், பிறகு நான்தான் ஹீரோ என்று தெரிந்ததும் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர்.

இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். பின்னர் காருக்குள் இதை நினைத்து மணிக்கணக்கில் அழுதேன். என்னை கேலி செய்யாத, அவமானப்படுத்தாத ஆளே இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்