< Back
சினிமா செய்திகள்
அந்த விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தது- ஹாலிவுட் நடிகை
சினிமா செய்திகள்

'அந்த விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தது'- ஹாலிவுட் நடிகை

தினத்தந்தி
|
28 April 2024 11:29 AM IST

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனி ஹாத்வே தனது சினிமா பயணத்தில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார்.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் நடிகை ஆனி ஹாத்வே. 'கெட் ஸ்மார்ட்', 'பாசஞ்சர்ஸ்', 'ஒன் டே', 'ஓசன்ஸ் 8', 'தி விட்சஸ்', 'லாக் டவுன்', 'தி ஐடியா ஆப் யூ' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

2012-ம் ஆண்டில் 'லெஸ் மிஸரபல்ஸ்' என்ற படத்தில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனி ஹாத்வே தனது சினிமா பயணத்தில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, "நடிகர், நடிகைகள் இடையே கெமிஸ்ட்ரி செட் ஆவதற்காக, படப்பிடிப்பு நடப்பதற்கு முன்பாகவே இருவரும் சகஜமாக பேசிக்கொள்ளுமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவுறுத்துவார்கள்.

'மேக்-அவுட்' என அழைக்கப்படும் அந்த நடைமுறையில் தவறு இல்லை. ஆனாலும் நான் சினிமாவில் நடிக்க வந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 10 ஆண்களுக்கு முத்தம் கொடுத்தேன். அந்த விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தது.

வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அதை செய்துவிட்டேன். அதை நினைத்து வருந்துகிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்