< Back
சினிமா செய்திகள்
எது செய்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் - கியாரா அத்வானியின் கதை தேர்வு உத்தி...!

Image Credits: Instagram.com/kiaraaliaadvani

சினிமா செய்திகள்

"எது செய்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும்" - கியாரா அத்வானியின் கதை தேர்வு உத்தி...!

தினத்தந்தி
|
21 Oct 2023 12:32 PM IST

சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்திருக்கும் கியாரா அத்வானி தன்னுடைய கதை தேர்வு உத்தியை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கியாரா அத்வானி தெலுங்கிலும் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்திருக்கும் கியாரா அத்வானி தன்னுடைய கதை தேர்வு உத்தியை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "எனக்காக கதை எழுதி காத்துக்கொண்டு இருப்பவர்களை நினைக்கும்போது என் மனதில் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

ஆனால் நான் எப்போதுமே கதை தேர்வு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். சினிமாவில் நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். எனவே கதைகளை தேர்வு செய்வதில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

அது உணர்ச்சிப்பூர்வமான கதையா, இல்லையா? என்பதை முன்னாடியே யோசித்துக்கொள்வேன். ஒரு படத்துக்கு என்னால் பலரின் முதலீடும், உழைப்பும், முயற்சியும் இருக்கும். எனவே எல்லாவற்றையும் கருதிதான் முடிவு எடுக்க வேண்டும்.

எது செய்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் கதை தேர்வில் முடிவுகளை எடுக்கிறேன். எனக்கும், எனது கணவர் சித்தார்த்துக்கும் சினிமாவில் நல்ல பெயர் இருக்கிறது. அதை காப்பாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்