< Back
சினிமா செய்திகள்
என்ன செய்தாலும், என்னை பற்றி விமர்சனங்கள் வருகின்றன - நடிகை நயன்தாரா
சினிமா செய்திகள்

"என்ன செய்தாலும், என்னை பற்றி விமர்சனங்கள் வருகின்றன" - நடிகை நயன்தாரா

தினத்தந்தி
|
23 Dec 2022 10:22 AM IST

“என்ன செய்தாலும், என்னை பற்றி விமர்சனங்கள் வருகின்றன” என்று நடிகை நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தனது சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை நேர்காணல் நிகழ்ச்சியில் பகிர்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் 18 வயதில் நடிக்க வந்து இப்போது 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. நான் எது செய்தாலும் விமர்சிக்கும் நிலை உள்ளது.

'சிவாஜி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு எடுத்தபோது வேண்டாம் என்று பலர் தடுத்தனர். அதை ஏற்காமல் நடித்தேன். அந்த பாடல் பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறியது. முன்பைவிட இப்போது என் மீது அதிக விமர்சனங்கள் வருகிறது. என்ன தவறு செய்தேன் என்று புரியவில்லை. இப்போது கூட கனெக்ட் படத்தில் எனது புகைப்படங்களை பார்த்துவிட்டு உடல் இளைத்து போனதாக விமர்சிக்கின்றனர். அந்த கதாபாத்திரத்துக்கு தேவை என்பதால் அப்படி இருந்தேன். குண்டாக இருந்தாலும் ஏதாவது சொல்கிறார்கள். உடல் இளைத்தாலும் குறை சொல்கின்றனர். நான் என்ன செய்தாலும் தவறாகி விடுகிறது. மருத்துவமனை காட்சியில் மேக்கப்போட்டு நடித்ததாகவும் விமர்சனம் வந்தது. அது கமர்ஷியல் படம் என்பதால் இயக்குனர் சொன்ன மாதிரி அப்படி நடித்தேன்'' என்றார்.

மேலும் செய்திகள்