'ரஜினிகாந்துக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக... '- நடிகர் சத்யராஜ்
|'கூலி' படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் 'கூலி' . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தில் 38 வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் படத்தில் இவ்வளவு காலம் ஏன் நடிக்கவில்லை, ஏதேனும் இருவருக்கும் இடையே பிரச்சினை உள்ளதா? என்ற கேள்விக்கு நடிகர் சத்யராஜ் பதிலளித்துள்ளார். அவர் பேசியதாவது,
"நான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு, இரண்டு ரஜினிகாந்த் படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். அதில் ஒன்று சிவாஜி மற்றொன்று எந்திரன்.கதாபாத்திரத்தில் எனக்கு திருப்தி இல்லாததால் அதில் நடிக்க மறுத்தேன். "இந்த காரணங்களைத் தவிர, எங்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளன?". ரஜினிகாந்துக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை", இவ்வாறு பேசினார்.