< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அழுத காரணம் என்னவோ?
|26 May 2023 9:44 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, 2018-ம் ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது 'காதலிக்க யாருமில்லை', 'லவ்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இவர், சோகத்தில் கண்ணீர் வடித்தபடி இருக்கும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள். என்ன பிரச்சினையாக இருக்கும்?