< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருக்குறளில் ஆன்மீகம் ஏது? - கவிஞர் வைரமுத்து கேள்வி
|9 Oct 2022 6:07 PM IST
திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என்று, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என்று, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மோட்சம் ஆன்மீகக் கற்பனை என்று தான் அறம் பொருள் இன்பத்தோடு வள்ளுவர் நிறுத்தி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவம் என்ற வாழ்வியல் நூலில் ஆன்மீகம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர், காற்றைப் போல் பொதுவான திருக்குறளுக்கு யாரும் சாயம் அடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தர்மார்த்த காமமோட்சம் என்பது வடமொழி நிரல்நிரை
மோட்சம் ஆன்மிகக் கற்பனை என்றுதான் வள்ளுவர் அறம் பொருள் இன்பத்தோடு நிறுத்தினார்
ஆன்மிகம் அதில் ஏது? வள்ளுவம் வாழ்வியல்நூல்
அது காற்றைப்போல் பொதுவானது
காற்றுக்கு யார் சாயம் அடிப்பது" என்று கூறியுள்ளார்.