தமிழ் யூடியூபர்களின் சொகுசு கார்கள் என்னென்ன..! விலை எவ்வளவு...?
|பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் உயிரிழந்தார்.
சென்னை,
தமிழ் யூடியூபர்களின் சொகுசு கார்;
சமீபத்தில் பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இர்பானிடம் அந்த கார் மட்டுன்றி ரூ. 2 கோடி மதிப்பிலான இன்னொரு சொகுசு காரும் உள்ளது. இர்பான் மட்டுமின்றி பல பிரபல யூடியூபர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் வைத்துள்ளனர் என்ற தகவல் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதன் கவுரி 37 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் வைத்துள்ளார்.
அடுத்ததாக சுகைல் என்ற யூடியூபர் 13-14 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் வைத்துள்ளார்.
அடுத்து ஜவர்பாய் என்ற உணவு பதிவர் 61 லட்ச ரூபாய் மதிப்பிலான காரை துபாயில் இருந்து வாங்கியுள்ளார்.
பிரங்ஸ்டார் சூர்யா 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் வைத்துள்ளார். ஹெமா என்ற யூடியூபர் 11 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வாங்கியுள்ளார். தமிழ்செல்வன் என்ற யூடியூபர் 17 லட்ச ரூபாய் மதிப்பிலான டாடா கார் வைத்துள்ளார்
இறுதியாக பிரபல பைக் யூடியூபர் டிடிஎப் வாசன் கார் வாங்க தனது 12 லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்கில் சென்று அங்கு அவர் எதிர்ப்பார்த்த சொகுசு சார் இல்லாததால் பிறகு வாங்கலாம் என திரும்பி வந்துள்ளார்.
அனைத்து பிரபல யூடியூபர்களும் சொகுசு கார் வைத்திருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.