தமன்னா, அனுஷ்கா செய்யாததை செய்துகாட்டிய இளம் நடிகை
|மிஸ்டர் பச்சன் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை,
ரவி தேஜா நடிக்கும் 'மிஸ்டர் பச்சன் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் முதல் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெறணது. இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இப்படம் அடுத்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக தெலுங்கில் பணிபுரியும் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தெலுங்கு வார்த்தைகள் தெரியாது. படத்தின் புரோமோசன் நிகழ்வில் மட்டும் சில வார்த்தைகள் ரசிகர்களுக்காக பேசுவார்கள்.
தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் மிஸ்டர் பச்சன் படத்திற்காக தானே டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். வேற்று மொழியிலிருந்து வரும் எந்தவொரு அறிமுக நடிகைக்கும் இது நிச்சயம் ஒரு சாதனைதான். அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் தங்கள் பாத்திரங்களுக்கு தாங்களே டப்பிங் செய்தார்கள் ஆனால் அவர்களின் முதல் படங்களுக்கு அல்ல.