'தி கோட்' படத்தை பற்றி அஜித் கூறிய விஷயம் - இயக்குநர் வெங்கட் பிரபு
|நடிகர் அஜித்குமார் இயக்குநர் வெங்கட் பிரபுவை வாழ்த்தியுள்ளார்.
சென்னை,
லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி 4,000 திரைகளில் வெளியானது.
திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தில் மட்ட என்ற பாடல் ரசிகர்கர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலில் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். அதிலும் விஜய் மற்றும் திரிஷா கில்லி படத்தில் அப்படி போடு பாடலில் ஆடிய ஸ்டெப்பை இப்பாடலிலும் ஆடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட வெங்கட் பிரபு. படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதில் அவர் கூறியதாவது " விஜய் சாருக்கு திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. படம் மொத்தமாக 3 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மேல் இருந்தது. நிறைய காட்சிகளை வெட்டிதான் 3 மணி நேர நீளத்திற்குக் கொண்டு வந்தோம். ஓடிடியில் வெளியாகும் போது டைரக்டர்ஸ் கட்டாக முழுப்படத்தையும் வெளியிட முயற்சி செய்வோம்' என கூறியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் 'கோட் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்' என தன்னிடம் சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.