"எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" - தளபதி 68 குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்...!
|லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.