< Back
சினிமா செய்திகள்
வாராவாரம்... அனைத்தும் உழைத்து உருவாகும் படங்கள்- ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி
சினிமா செய்திகள்

வாராவாரம்... 'அனைத்தும் உழைத்து உருவாகும் படங்கள்'- ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
8 April 2024 6:29 AM IST

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ள டியர் படம் வெளியாக இருக்கிறது.

சென்னை,

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடியே, ரெபல், கள்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். தற்போது ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் இணைந்து நடித்துள்ள டியர் படமும் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, "வாராவாரம் எனது படங்கள் வருகிறதே என்று கேட்கிறார்கள். அனைத்தும் உழைத்து உருவாகும் படங்கள். டியர் கதையை ஐஸ்வர்யா ராஜேஷ் என்னிடம் கேட்க சொன்னார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் என்று தயங்கினேன். ஆனால் கதை கேட்டதும் அழுது விட்டேன். எல்லோரும் போட்டிபோட்டு நடித்தோம்'' என்றார்.

மேலும் செய்திகள்