< Back
சினிமா செய்திகள்
வெப்பன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு
சினிமா செய்திகள்

'வெப்பன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

தினத்தந்தி
|
14 May 2024 4:57 PM IST

‘வெப்பன்’ திரைப்படம் மே மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெப்பன். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக வசந்த் ரவி நடித்திருந்த தரமணி படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, வெப்பன் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வெப்பன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மே மாத இறுதிக்குள் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

வெப்பன் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் இளம்வயது சத்யராஜை கிராபிக்ஸில் படக்குழு உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்