கத்ரீனா கர்ப்பமாக இருக்கிறாரா? - கணவர் விக்கி கவுசல் பதில்
|கத்ரீனா கைப் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது கத்ரீனா கைப் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
விரைவில் நடிகர் விக்கி கவுசல் நடித்துள்ள 'பேட் நியூஸ்' படம் திரைக்குவரவுள்ளது. இப்படத்தை, பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக விக்கி கவுசல் நடித்திருந்த 'லவ் பேர் ஸ்கொயர் பீட்' படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். பேட் நியூஸ் படத்தில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், கத்ரீனா கைப் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருவது குறித்து கேள்விக்கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'சரியான நேரத்தில் நல்ல செய்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்வேன்' என்று தெரிவித்தார்.