விமல் பற்றி எதிர்மறையாக கேள்விப்பட்டோம் - டைரக்டர் வேலுதாஸ்
|'களவாணி', 'பசங்க' ஆகிய படங்களின் மூலம் பிரபலமான விமல், பெரும்பாலான படங்களில் கிராமத்து இளைஞராகவே நடித்து இருக்கிறார். இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'துடிக்கும் கரங்கள்' படத்தில் அவர், நகரத்து இளைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடி, மும்பையைச் சேர்ந்த மனிஷா. சுரேஷ்மேனன், சதீஷ் இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள்.
வேலுதாஸ் இயக்கி வருவதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். 'கனவு' என்ற குறும்படத்தை இயக்கியதற்காக சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.
இவர் சொல்கிறார்:-
''இந்தப் படத்தில் விமல் யூடியூப் சேனல் நிருபராக நடிக்கிறார். அந்த நிருபர், ஒரு பெரிய இடத்தின் பகையை சம்பாதிக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பது கதை.
இந்த கதாபாத்திரத்துக்காக நகரத்து இளைஞராக அதிகம் நடித்திராத ஒரு கதாநாயகனை தேடினோம். விமல், நினைவுக்கு வந்தார். அவரை பற்றி வெளியே எதிர்மறையாக கேள்விப்பட்டோம். அதுபோல் அவரை நாங்கள் பார்க்கவில்லை. எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படத்தை கே.அண்ணாத்துரை தயாரிக்கிறார்.''