'இந்த மாதிரி ரஜினியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம்' - லோகேஷ் கனகராஜ்
|சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றிருந்தார். அந்த விழாவில் சினிமா ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பறிவ் சகோதரர்களுக்கு டாப் 10 இளைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை லோகேஷ் கனகராஜ் வழங்கினார்.
அப்போது லோகேஷ் பேசியதாவது, "நான் என்னுடைய முதல் படம் பண்ணும்போது இவர்கள் தமிழில் அறிமுகமானார்கள். நான் என்னுடைய ஆரம்பக்கட்டத்தில் அன்பறிவ் அண்ணனோட அலுவலகத்தில் உட்கார்ந்துதான் கதை எழுதினேன்" என்றார்.
பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்தார். அது குறித்து கூறுகையில்,
'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும். இந்த மாதிரி ரஜினியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம். அதற்கான முயற்சிகளைத்தான் செய்து வருகிறோம். இது 100 சதவிகிதம் லோகேஷ் படம்தான்" என்றார்.