< Back
சினிமா செய்திகள்
7 வருடங்களாக காதலித்தோம்- ஆதி-நிக்கி கல்ராணி
சினிமா செய்திகள்

'7 வருடங்களாக காதலித்தோம்'- ஆதி-நிக்கி கல்ராணி

தினத்தந்தி
|
22 May 2022 2:06 PM IST

சமீபத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி. இருவரும் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

அந்த சுவையான கலந்துரையாடல் வருமாறு:-

கேள்வி:- உங்கள் இருவரில் யார் முதலில் காதலை சொன்னது?

ஆதி பதில்:- நாங்கள் இதுவரை ஒருவருக்கொருவர் காதலை கூறிக்கொண்டதில்லை. இரண்டு பேரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தோம். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நாங்கள் பிறகு திருமண வாழ்க்கையை இருவரும் பகிர்ந்து கொள்வது என்று பேசி முடிவு எடுத்தோம்.

இருவர் வீட்டிலும் சொன்னோம். சம்மதித்தார்கள்.

கேள்வி:- ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்?

நிக்கி பதில்:- ஒரு பெண் எப்படி இருக்கிறாரோ அப்படி இருந்தாலே போதும். அதுவே அழகாக இருக்கும்.

கேள்வி:- திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பீர்களா?

நிக்கி பதில்:- அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

மேலும் செய்திகள்