< Back
சினிமா செய்திகள்
We got an international range director in our industry - Raghava Lawrence
சினிமா செய்திகள்

'நமக்கு ஒரு சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்துள்ளார்' - ராகவா லாரன்ஸ்

தினத்தந்தி
|
29 July 2024 11:34 AM IST

தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'ராயன்' படம் கடந்த 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 24 கோடி வரை வசூலித்தது. இவ்வார இறுதியில் இப்படம் 60 முதல் 70 கோடி ரூபாயை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ராயன் படத்தை பார்த்து தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"நேற்று 'ராயன்' திரைப்படத்தை பார்த்தேன். தனுஷ் மிகச்சிறப்பாக இயக்கியும் நடித்தும் உள்ளார். எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துஷாரா விஜயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் சார் சிறப்பான இசை கொடுத்துள்ளார். நமக்கு தற்போது ஒரு சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்து இருக்கிறார். தனுஷின் 50வது படத்திற்கு வாழ்த்துகள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்