< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வயநாடு நிலச்சரிவு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி
|7 Aug 2024 11:39 AM IST
வயநாடு நிலச்சரிவுக்கு கேரள முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு, நடிகர்- நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள்.
ஐதராபாத்,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கேரள முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு நடிகர் நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.
நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, துல்கர் சல்மான், நடிகர் ஜெயரம், பகத் பாசில், நடிகைகள் ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நிதி வழங்கி இருக்கிறார்கள். இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ரூ.2 கோடி கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் வழங்கி உள்ளார்.