< Back
சினிமா செய்திகள்
படம் கைவிடப்பட்டதா? லாரன்ஸ் படத்தின் வதந்திக்கு விளக்கம்
சினிமா செய்திகள்

படம் கைவிடப்பட்டதா? லாரன்ஸ் படத்தின் வதந்திக்கு விளக்கம்

தினத்தந்தி
|
25 Nov 2022 7:45 AM IST

லாரன்ஸ் படம் கருத்து வேறுபாடுகள் காரணமாக ‘அதிகாரம்' படம் கைவிடப்பட்டதாக பரவிய வதந்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் வெற்றி மாறன் கதை, திரைக்கதை, வசனத்தில் 'அதிகாரம்' என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரிக்க இருப்பதாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 'அதிகாரம்' படத்தை துரை செந்தில்குமார் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக 'அதிகாரம்' படம் கைவிடப்பட்டதாகவும், இதனால் துரை செந்தில்குமார் வேறு படத்தை இயக்க சென்றுவிட்டார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவின. இதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, 'அதிகாரம்' படம் கைவிடப்பட்டதாக பரவி உள்ள வதந்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 'அதிகாரம்' படத்தை கைவிடவில்லை. திரைக்கதைக்கான பணிகள் மற்றும் படப்பிடிப்புக்கான திட்டங்கள் சுமுகமாக நடந்து வருகின்றன' என்றார்.

லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி-2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'சந்திரமுகி-2' படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது. 'ருத்ரன்' படத்தில் ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது.

மேலும் லாரன்ஸ் நடிக்க உள்ள 'ஜிதர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்