< Back
சினிமா செய்திகள்
டைரக்டராக விரும்பினேன்... ரஹ்மான் பகிர்ந்த சினிமா அனுபவங்கள்
சினிமா செய்திகள்

டைரக்டராக விரும்பினேன்... ரஹ்மான் பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

தினத்தந்தி
|
17 Oct 2023 8:52 AM IST

டைரக்டராக விரும்பினேன் என்று நடிகர் ரஹ்மான் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ், மலையாள படங்களில் பிஸியாக நடித்து வந்த ரஹ்மான் தற்போது கண்பத் படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார்.

சினிமா அனுபவங்கள் குறித்து ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு படம் டைரக்டு செய்யும் எண்ணம் இருந்தது. உணர்வுப்பூர்வமான ஒரு கதையையும் உருவாக்கினேன். படத்துக்கு ஈடன் கார்டன் என்று பெயர் வைத்தேன். ஆனால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்ததால் இயக்க முடியவில்லை.

பொன்னியின் செல்வன் வெற்றி மகிழ்ச்சி அளித்தது. நான் டான்சர் இல்லை. நடனம் தெரியாமல் சங்கமம் படத்தில் நடித்தேன். அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்து.

கண்பத் படம் மூலம் இந்திக்கு சென்றுள்ளேன். இந்த படத்தில் அமிதாப்பச்சன் மகனாக நான் நடிப்பதாக சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் ஏற்கனவே அமைந்தது.

இன்றைய காலகட்டத்தில் எந்த படம் எடுத்தாலும் இன்னொரு படத்துடன் ஒப்பிட்டு பேசும் பழக்கமும், எல்லா படங்களிலும் குறை கண்டுபிடிக்கும் பழக்கமும் உள்ளது.. 90-களில் நடிகர்கள் எல்லோரும் பாசமாக பழகினார்கள்.

தமிழில் தற்போது கார்த்திக் நரேன் டைரக்சனில் 'நிறங்கள் மூன்று' என்கிற படத்தில் நடித்துள்ளேன். துப்பறிவாளன் 2, ஜனகனமன, அஞ்சாமை படங்களும் கைவசம் உள்ளன. மலையாளத்திலும் நடிக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்