< Back
சினிமா செய்திகள்
பாஜகவை கண்டித்து 27-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம்- காயத்ரி ரகுராம் டுவீட்
சினிமா செய்திகள்

பாஜகவை கண்டித்து 27-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம்- காயத்ரி ரகுராம் டுவீட்

தினத்தந்தி
|
14 Jan 2023 3:33 PM IST

எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன் என காய்த்ரி ரகுராம் கூறி உள்ளார்.

சென்னை:

நடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

"பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன்.

தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன்.

நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும்" என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்