< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'வாய்ஸ்கே இப்படியா..' வைரலாகும் 'ஜப்பான்' பட வீடியோ..!
|16 Sept 2023 11:10 PM IST
'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.
சென்னை,
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு 'வாய்ஸ்கே இப்படின்னா.. படம் ரிலீசானா' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.