< Back
சினிமா செய்திகள்
விஷ்ணு விஷாலின் நீர்ப்பறவை 2-ம் பாகம்
சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலின் 'நீர்ப்பறவை' 2-ம் பாகம்

தினத்தந்தி
|
2 Dec 2022 11:32 AM IST

நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் டைரக்டர் சீனு ராமசாமி அறிவித்து உள்ளார்.

தமிழில் 2-ம் பாகம் படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, கோலி சோடா, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் தயாராகி உள்ளது. இந்தியன் 2-ம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் டைரக்டர் சீனு ராமசாமி அறிவித்து உள்ளார். நீர்ப்பறவை படம் கடந்த 2012-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.

இதில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடலோர இளைஞனின் வாழ்வியல் கதையாக்கப்பட்டு இருந்தது. நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் நீர்ப்பறவை படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து டைரக்டர் சீனுராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நீர்ப்பறவை பாகம் 2 தொடங்கப்படும். நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடு கட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைபெருமக்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்