விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு - வைரலாகும் போஸ்டர்
|நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
விஜய்சேதுபதி 2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.
தற்போது விஜய்சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பைக்கில் அமர்ந்துக் கொண்டு வருவது போன்று இடம்பெற்றுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.