< Back
சினிமா செய்திகள்
சர்ச்சையில் விஷ்ணு விஷால்...!
சினிமா செய்திகள்

சர்ச்சையில் விஷ்ணு விஷால்...!

தினத்தந்தி
|
24 Aug 2023 12:25 PM IST

‘நான் மகான் அல்ல' படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்

'வெண்ணிலா கபடி குழு', 'குள்ளநரி கூட்டம்', 'நீர்ப்பறவை', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான விஷ்ணு விஷால் சமீபத்தில் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது.

அதில் 'நான் மகான் அல்ல' படத்தில் நான் நடித்திருக்க வேண்டும், அந்த படம் மட்டும் எனது 2-வது படமாக அமைந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்?, என்று குறிப்பிட்டு இருந்தார்.

நான் மகான் அல்ல படத்தை கார்த்தி தட்டிப்பறித்து விட்டார் என்று விஷ்ணு விஷால் ஆதங்கம் வெளியிட்டு இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் கருத்துகள் பதிவிட்டனர். விஷ்ணு விஷாலை சிலர் விமர்சிக்கவும் செய்தனர்

சர்ச்சைக்கு விளக்கம் அளித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், ''என் முதல் படம் மிகப்பெரிய ஹிட். ஒரு ஹீரோவுக்கு 2-வது படம்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 'நான் மகான் அல்ல' எனது 2-வது படமாக இருந்திருக்க வேண்டும்.

என்னுடைய 2-வது மற்றும் 3-வது படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு சினிமாவில் காலூன்ற பல வருடங்கள் ஆகிவிட்டது. என் செயல்களால் அந்த படம் கையை விட்டு போகவில்லை. சினிமாவின் பரிமாணம்தான் அதற்கு முக்கிய காரணம். அவ்வளவு தான்'', என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்