< Back
சினிமா செய்திகள்
விவாகரத்து வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்
சினிமா செய்திகள்

விவாகரத்து வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

தினத்தந்தி
|
28 March 2023 8:58 AM IST

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அவர் நடிப்பில் வந்த ராட்சசன், எப்.ஐ.ஆர்., கட்டா குஸ்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன. தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் வலைத்தளத்தில், "பரவாயில்லை. மறுபடியும் நான் முயற்சி செய்தேன். மீண்டும் தோற்று விட்டேன். மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போனமுறை ஏற்பட்டது தோல்வி அல்ல. அது என் தவறும் அல்ல. அது துரோகம். ஏமாற்றம்'' என்று பதிவிட்டு இருந்தார்.

இதைபார்த்த ரசிகர்கள் இரண்டாவது மனைவியையும் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்கிறாரா என்று கேள்வி எழுப்பினர். இது பரபரப்பானது. இதற்கு விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில நாட்களுக்கு முன் நான் வெளியிட்ட பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த பதிவு தொழில் ரீதியானது. சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல'' என்று கூறியுள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்