< Back
சினிமா செய்திகள்
அருண்ராஜா காமராஜ் - விஷ்ணு விஷால் பட அப்டேட்
சினிமா செய்திகள்

அருண்ராஜா காமராஜ் - விஷ்ணு விஷால் பட அப்டேட்

தினத்தந்தி
|
15 Jun 2024 8:39 PM IST

டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய விஷ்ணு விஷால், தொடர்ச்சியாக "பலே பாண்டியா", "குள்ளநரி கூட்டம்", "நீர்பறவை", "முண்டாசுப்பட்டி" மற்றும் "இன்று நேற்று நாளை" போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார். இறுதியாக சூப்பர் ஸ்டாரின் "லால் சலாம்" திரைப்படத்தில் தோன்றிய விஷ்ணு விஷால், "மோகன் தாஸ்" மற்றும் "ஆரியன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான கட்டாகுஸ்தி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் தன் எக்ஸ் பக்கத்தில் அருண்ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "பிறந்தநாள் வாழ்த்துகள் அருண்ராஜா காமராஜ். நம் படத்தை துவங்கும் வரை காத்திருக்க முடியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'லேபிள்' தொடர் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்