< Back
சினிமா செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
26 Aug 2024 9:53 PM IST

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்திலும் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் சிவனாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமாரும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படத்தில் மோகன்பாபு, சரத்குமார், காஜல் அகர்வால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. கண்ணப்பா திரைப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வௌியாகி டிரெண்டாகியது.

விஷ்ணு மஞ்சுவின் மகனும், பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, 'கண்ணப்பா' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கண்ணப்பாவாக நடிக்கும் அவ்ராமின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகள்