< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் அப்டேட்..!
|28 Aug 2022 8:50 PM IST
நடிகர் விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.
சென்னை,
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை ரிது வர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் உந்த படத்துல் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (29.08.2022) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.