< Back
சினிமா செய்திகள்
விஷாலின் லத்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

விஷாலின் 'லத்தி' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Dec 2022 4:09 PM IST

'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்