< Back
சினிமா செய்திகள்
மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

தினத்தந்தி
|
30 Oct 2023 11:35 PM IST

மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை,

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இதில் நாயகியாக ரித்து வர்மா, முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் இந்த திரைப்படம் 101 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார், இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரனுக்கு BMW கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.



மேலும் செய்திகள்