< Back
சினிமா செய்திகள்
விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
சினிமா செய்திகள்

விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
4 July 2023 5:39 PM IST

விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'லத்தி' படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்