'லத்தி' படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் விஷால்
|வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஷால் இப்போது, 'லத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ஏ.வினோத்குமார் டைரக்டு செய்கிறார்.
அவர் கூறியதாவது:-
"லத்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர் ஐதராபாத்தில் படம் வளர்ந்து வந்தது. தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடை பெறுகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப் பிடிப்பும் நடந்து முடிந்துவிடும்.
இதில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில், 7 வயது மகனுக்கு தந்தையாக நடிக்கிறார். அவருடைய மனைவியாக சுனைனா நடிக்கிறார். தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து இருபதாயிரம் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். அவர்களை நிர்வகிக்கிற அதிகாரிகள் குறைவுதான்.
நடப்பு பிரச்சினைகளை கான்ஸ்டபிள்களே கவனிக்கிறார்கள். அவர்களிடம் உள்ள பெரிய ஆயுதம், லத்திதான். அதன் மதிப்பையும் படம் பேச இருக்கிறது."