விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? நடிகர் விஷால் விளக்கம்
|நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தக் காரணம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 67-வது படம். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் சில முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று விஷால் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஷால் அளித்துள்ள பேட்டியில், ''இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை சந்தித்து விஜய் படத்தில் நடிக்கும்படி கேட்டார். ஆனால் எனக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் விஜய் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் எதிர்காலத்தில் விஜய் படத்தில் நடிப்பேன். எனது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை எடுத்து மக்களிடம் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. துப்பறிவாளன் 2 படத்தில் நடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதை சொல்லி நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்'' என்றார்.