< Back
சினிமா செய்திகள்
பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி - சாம் மெர்சன்ட் ஒன்றாக ஷாப்பிங்... வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி - சாம் மெர்சன்ட் ஒன்றாக ஷாப்பிங்... வீடியோ வைரல்

தினத்தந்தி
|
22 March 2024 11:50 AM IST

திரிப்தி டிம்ரியும் சாம் மெர்சன்டும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி. இவர் 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த 'அனிமல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், கடந்த மாதம் திரிப்தி டிம்ரி தனது 30 வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது சாம் மெர்சன்ட் என்பவர் திரிப்தி டிம்ரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'பிறந்தநாள் வாழ்த்துகள் அன்புக்குரிய திரிப்தி' என்று எழுதி அதனுடன் இதய எமோஜையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை திரிப்தி டிம்ரியும் இதய எமோஜுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் சாம் மெர்சன்ட், திரிப்தி டிம்ரியின் காதலன் என்று இணையத்தில் பரப்பினர். இதனை மறுத்த திரிப்தி டிம்ரி, தான் சிங்கிள் என்று தெரிவித்து அதனை வதந்தியாக மாற்றியிருந்தார்.

இந்நிலையில், திரிப்தி டிம்ரி அவரது காதலன் என்று வதந்தி பரப்பப்பட்ட சாம் மெர்சன்டுடன் ஷாப்பிங் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் திரிப்தி டிம்ரி பச்சை நிற ஆடையை அணிந்திருக்கிறார். சாம் மெர்சன்ட் பிங்க் நிற சட்டையை அணிந்திருக்கிறார்.

திரிப்தி டிம்ரி, தான் சிங்கிள் என்று தெரிவித்திருந்த நிலையில் சாம் மெர்சன்டுடன் ஷாப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்