வைரலாகும் புகைப்படம்... விஜய் தேவரகொண்டா-சமந்தா நெருக்கம்?
|கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சில மாதங்கள் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்து இருந்தார். தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக பழகுவதாக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் வருகின்றன. குஷி படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ள நிலையில் அங்கு ஓட்டல் ஒன்றில் விஜய்தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டு உள்ளார்.
அதில் விஜய்தேவரகொண்டா குறித்து சமந்தா பகிர்ந்துள்ள பதிவில், "நீ கடைசியில் இருந்தபோதும் பார்த்தேன். முதல் இடத்திற்கு வந்தபோதும் பார்த்தேன். நீ உன்னத நிலையை அடைந்தபோது கூட பார்த்தேன். வாழ்க்கையில் நீ கடந்து வந்த மேடு பள்ளங்களை எல்லாம் பார்த்தேன். எப்படிப்பட்ட நேரத்திலும் கூட சினேகிதர்கள் நம்முடனேயே இருப்பார்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு விஜய்தேவரகொண்டா, "எப்போதும் எனக்கு பிடித்த பெண் சமந்தா'' என்ற பதிவை பகிர்ந்துள்ளார். ஓட்டலில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வைரலாகிறது. அவர்களின் சாப்பாட்டு மேஜையில் மதுபாட்டில் உள்ளது. அதை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.